Father of the Ration ;-)
காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபையில் அடிக்கும் கூத்து எல்லை மீறிப் போய் விட்டதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியே வெட்கிப் போகும் அளவுக்கு, அவருக்கு புகழாரம் சூட்டி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்வதற்கானக் காரணமும் புரியவில்லை. மேடம் சோனியாவின் உத்தரவாகக் கூட இருக்கலாம், யார் கண்டது??
காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவரான D யசோதா, நேற்று சட்டசபையில் ஒரு தமாஷ் பண்ணினார். அதாவது, "மகாத்மா காந்தியை Father of the Nation (தேசப்பிதா) என்று போற்றுவது போல, கருணாநிதி அவர்களை Father of the Ration (நியாய விலைக் கடைகளின் தந்தை ;)) என்று அழைப்பது சாலப் பொருந்தும்" என்று ஒரே போடாகப் போட்டார் !!!
கருணாநிதி அவர்கள், ரேஷனில் 2 ரூபாய்க்கு (1 கிலோ) அரிசி கிடைக்கச் செய்ததோடு அல்லாமல், இன்ன பிற பருப்புகளும் சமையல் எண்ணெயும், மலிவான விலையில் கிடைக்கும்படி செய்ததற்காகவே, இந்த சூப்பர் 'குளிர்ச்சி' புகழாரம் யசோதாவால், அவருக்கு சூட்டப்பட்டது.
இன்னொரு, காங்கிரஸ் MLA தண்டபாணி அவர்கள், "திமுக அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டுவதை நீங்கள் 'ஜால்ரா' என்று கூறினால், அது குறித்து எனக்கு வெட்கமில்லை! அந்த "ஜால்ரா" இனிமேல் இன்னும் சத்தமாக ஒலிக்கும். நீண்ட தூர ஓட்டத்தின்போது (marathon), ஓட்டத்தில் பங்கு பெறுபவர்களை பார்வையாளைகள் உற்சாகப்படுத்துவதை ஒத்தது நாங்கள் திமுக அரசை ஊக்கப்படுத்துவது" என்று நேரடியாகவே போட்டுத் தாக்கினார் :)
எல்லாம் சரி தான்! புகழ்ச்சிக்கும் ஒரு அளவு வேணும்! யாரும் யாரையும், ஹீரோவும் ஆக்க வேண்டாம், அடுத்து சீரோவும் (zero) ஆக்க வேண்டாம்!
நாளைக்கே, யாராவது 'ஆட்சியில் பங்கு கேளுங்க'ன்னு உங்களை (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!) தூண்டி விட்டு, நீங்களும் பங்கு கேட்டு, 'எப்போதும் போல' நம்ம முதல்வர், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு சொன்னார்னா, நீங்க எல்லாரும் கடுப்பாகி, பெரியவரை தடாலடியா, "Father of the Fashion"ன்னு சொல்லி, காலை வாரி விட்டு விடுவீர்களே! அதான் கொஞ்சம் பிராப்ளம் :)))
அப்படி பண்ணாம இருந்தா எல்லாம் OK தான்! அந்த சமயத்துலே, வேற யாரையாவது, "Mother of the Ration"ன்னு சொல்லாமல் இருந்தா சரி தான் ;-)))
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
*** 333 ***
3 மறுமொழிகள்:
இந்த வியாக்கியானமெல்லாம் சரி....ஜெயராமன் விஷயத்தில் தங்களது கருத்தென்ன.....அது பற்றி ஏன் ஒரு பதிவும் போடவில்லை?..
//இந்த வியாக்கியானமெல்லாம் சரி....ஜெயராமன் விஷயத்தில் தங்களது கருத்தென்ன.....அது பற்றி ஏன் ஒரு பதிவும் போடவில்லை?..
//
NO COMMENTS ;-))))))
Post a Comment